Saturday, 21 July 2012

மழை ஒரு சகாப்தம்

மழை என்பது பல நீர்த்துளிகள் கொண்ட தொடர் அணிவகுப்பாக வானிலிருந்து பூமியை நோக்கி விழும் ஒரு அதிசய நிகழ்வு. சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்வரை நாம் வாழும் பூமிக்கு கிடைத்த வரப்பிரச்சாதம் மழை. மழையின் சப்தம் ஆயிரம் குழாய்தண்ணீர் விழுவதைப் போன்றுயிருக்கும், மழை பார்ப்பதற்கு மிக ரம்பமாகயிருக்கும், மழை மண்ணில் விழுந்தவுடன் ஒரு வாசனை பரப்பும் அதற்கு பெயர் மண் வாசனை. நாம் வெயிலுக்காக பிடிக்கும் குடையை அந்த காலத்து மக்கள் மழைக்காக பிடித்திருப்பார்கள் என்கிறது தற்காலத்து ஆய்வுகள். மழைத்தண்ணீர் நாம் குடிக்கும் மினரல் தண்ணீரை விட சுவையானது மிகவும் சுத்தமானதாகவும் இருந்துள்ளது. அந்த காலத்து தேடு எந்திரமான கூகிளில் பல அரிய வகை மழைக்காட்சிப் படங்களை இன்றும் காணலாம்.
கி.பி. 2000 ஆண்டுவாக்கில் வெளிவந்த படங்கள் மூலம் மழை எப்படி பெய்ந்தது என்று அறியலாம் மேலும் அதே படங்கள் மூலம் மழையை எப்படி சேமிக்காமல் வீணாக்கலாம் என்பதையும் அறியலாம். இப்போது கடல் நீரை குடிநீராக மாற்றசெலவிடுவதைவிட அன்றே நம் முன்னோர்களால் மழை நீர் சேமிக்கப்பட்டிருந்தால் இந்தபிரச்சனையே வந்திருக்காது. இன்று மல்டிப்லெக்ஸும் ஸாப்பிங் மாலும் உள்ள இடங்களில் அன்று கண்மாய்கள் எனப்படும் சிறு குளங்களிருந்ததாகவும் அதில் மழைநீரை சேமித்ததாகவும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கோவில்களில் உள்ள விளையாட்டு மைத்தானங்கள் உண்மையில் தெப்பக்குளங்களாக நீரை தேக்கிவைத்தாம் இன்று நீரின்றி விளையாட்டு மைதானங்களாக முழுதும் மாறிவிட்டது. நம் நாட்டுக்காக மிகவும் தொலைநோக்குப்பார்வையில் சீர்திருத்தங்கள் செய்த தலைவர்களுக்கு ஊருக்குள் சிலை வைக்க இடமில்லாததால் பெரிய பெரிய மலைத்தொடர்களில் அவர்களுக்கு சிலை செதுக்கப்பட்டு அழகாக மரியாதை செழுத்தப்படுகிறது மேலும் அது சுற்றுலாத்தளமாகவும் குல்ப் விளையாட்டு தளமாகவும் மாறியிருப்பது மகிழ்ச்சியே. மொட்டைப் பாறைகளாகயிருந்தாலும் இன்று வானிலிருந்து போகும் டவுன் பிளைட்டுகளிலும் சிட்டி பிளைட்டுகளிலும் அந்த மலைகளைக்கண்டால் அந்த தலைவர்களை நேரில் பார்த்ததைப்போல தோன்றும் ஆனால் உண்மையில் இந்த இடங்கள் கி.பி.1990களில் பெரிய நீர்வீழ்ச்சிகளாகயிருந்த இடங்கள் இன்று நீரற்று போய்யுள்ளது என தெரியவருகையில் நம் கண்களில் நீர் ஊறுவது திண்ணம்.
அக்காலத்துமக்கள் இன்று நாம் அணியும் யு.வி. சட்டைகளை அணியவில்லை காரணம் ஓசுன் என்ற வாயு மண்டலம் பூமியை சூழ்ந்திருந்ததாகவும், யு.வி. கதிர்களை தடுத்ததாகவும் வரலாறு சொல்லுகிறது. அதற்கு கீழே மேகம் என்று அழைக்கப்பட்ட ஒரு மாபெரும் ஆவி மண்டலம் இருந்திருந்ததாம் அதுதான் மழையை உற்பத்தி செய்ததாம். அந்த மேகம் ஒரேயிடத்தில் நிற்கும் மண்டலமல்ல நகர்ந்த வண்ணமே திரியுமாம், அதில் வேடிக்கையென்னவென்றால் மழை வரும் என்று ஆய்வாளர்கள் கூறினால் மழை பொழியாதாம். மழையை கண்ணில் பார்த்த மூத்தகுடிமக்களை வைத்து ஆய்வுகள் நடந்தவண்ணமுள்ளது. மழைக்காலம் என்று ஒரு காலமேயிருந்த்தாம் அதில் மழை தினமும் பொழியுமாம். கப்பல் போக்குவரத்திற்காக பயன்படும் கடல்கள்கூட இந்தமாதிரியான மழையால் உருவானவையே. இன்று எறிமலைகளுக்கான தடுப்புச்சுவர்களாகயிருக்கும் மாபெரும் சுவர்களெல்லாம் ஒரு காலத்தில் அணைக்கட்டுகளாகயிருந்தவை அவை பல நூறு அடிகள் வரை மழை நீரை சேமித்துவைக்கும் திறன் கொண்டவை. அந்த அணைகள் பார்ப்பதற்கு குட்டி கடலைப்போலயிருக்கும். நாம் கழிவு நீரை வெளியேற்றும் வாய்க்கால்கள் அன்றைய காலத்தில் ஆறுகள் என்றபெயரில் நல்ல நீரை கடலுக்கு கொண்டு சென்றவையாம் காலப்போக்கில் மணல்கள் அள்ளப்பட்டு பள்ளமாகி போனதாம்.
அந்த மழை நீரால் மண்ணரிக்க முடியாமல் பலமரங்கள் தங்கள் வேர்களால் பாதுகாத்தனவாம் அதை அந்த காலத்து வியாபாரிகள் போட்டிபோட்டு வெட்டி பணமாக மாற்றி பாதுகாத்தனராம். எஞ்சியிருந்த மாபெரும் மரங்களை காட்டுத்தீ பரவி அழித்ததாம். மழை இல்லாததால் ஈரப்பதமில்லாமல் போனதாலும் இந்த தீ எளிதில் பரவி காடுகளை அழித்ததாம். அந்த இடங்களில் தான் இன்று இராட்சச ஆன்டனாக்களும் ராடர்களும் பொருத்தப்பட்டு நிலவில் உள்ள நீரை பற்றி ஆராய்கிறோம். தற்போது நீர் அதிகம் எடுக்காத மறபணு மாற்றப்பட்ட மரங்களால் குறைந்த வெப்பநிலைக்கே தாங்கமுடியாமல் ஆங்காங்கே சாலையோரங்களில் ஒடிந்துவிழுகிறது ஆனால் அக்காலத்தில் பல்லநூறு ஆண்டுகள் வாழ்ந்ததாக சொல்லப்படும் மரங்களை இன்று இமயமலைப் பகுதிகளில் மட்டுமே காணக்கிடைக்கிறது. கி.பி. 2000 வாக்கில் இமயமலையில் மக்கள் குடியேராமல்யிருந்தனர் ஆனால் இப்போது பனிக்கட்டிகள் இல்லாததால் அங்கும் விவசாயம் செய்ய மக்கள் குடியேற்றப்படுகிறார்கள் இதற்கிடையில் சீனா மக்களும் அங்கு குடியேறி சொந்தம் கொண்டாடுவது பனியால் வந்த சனி எனலாம்.
புதைபொருள் ஆராய்ச்சியாளர்களின் குறிப்பின்படி அந்தகாலத்தில் பூமிக்கடியில் 10அடியில் நீர் கிடைத்ததாம் அதை எளியரக பம்புகள் கொண்டும் கிணறு எனப்படும் பெருங்குழியாக தோண்டியும் நீரை பெற்றனராம்.பெருமழைக்காலத்தில் பள்ளிகளுக்கு விடுமுறைகூட விட்டனராம் சில சமயம் வெள்ளம் என்று கூறிக்கொண்டு ஒரு ஊரைக்கூட நீரில் மூழ்கடிக்குமாம் அந்த நேரத்தில் ஊரே ஸ்தம்பித்து போய்விடுமாம். தற்கால மக்கள் கண்டிடாத மழையைப்பற்றி 'மழைப்பார்க்' என்ற படம் எடுக்கப்பட்டுவருகிறது, ஜூராசிக் பார்க் பார்ட் 10 எடுத்த இயக்குனர் இயக்கத்தில் வெளிவருகிறது அந்தப்படதின் மூலம் பல அறியவகை விசயங்களை நாம் அறியலாம். அந்த காலத்துமக்களின் மூலம் கிடைத்தப்பாடத்தை வைத்து இனியாவது இயற்கையை பாதுகாப்போம் எஞ்சியிருக்கும் கடலையாவது கடனுக்காவது மாசுபடுத்தாமல் காப்போம்.

உலகை ஆண்ட தமிழர்களின் வரலாறு!

 
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல...்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.

இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.

வரலாற்றுத் தேடல் தொடரும்..!

உலகின் அதிசயம்

உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , இந்த கட்டிடத்தை முதலில் கட்டும் போது, இதன் கீழ் உள்ள மண்ணை சோதிக்காமல் , ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிப்படை விசயங்களை கூட கடைப்பிடிக்காமல் கட்டிட அடித்தளத்தை மிகவும் மோசமாக கட்டினர் , இதனால் இந்த கட்டிடம் சாயத்தொடங்கியது ,இரண்டாம் தளம் கட்டும் போது போர் மூண்டதால் இதன் கட்டுமானம் சிறிது காலம் நிறு...த்தி வைக்கப்பட்டு பின்னர் தொடங்கியதும் ஓரளவிற்கு இதன் அடித்தள மண் இதற்கு ஒத்துழைத்தது ! இதனால் மூன்றாவது தளத்தை அமைக்க முடிந்தது ! ஒரு கேவலமான கட்டுமானத்திற்கு எடுத்துக்காட்டான ஒரு கட்டிடம் உலக அதிசயப்படியலில் இன்றும் உள்ளது ! (AUG 8TH 1173 - 1372)

நம் தஞ்சையில் உள்ள கட்டிடக்கலைக்கு பெயர் போன ராஜா ராஜா சோழனால் கட்டப்பட 216 அடி உலகையே மிரளச்செய்யும் தஞ்சை பெரிய கோயில் வெறும் 12 ஆண்டுகளில் கட்டப்பட்டது , இதன் கோபுரத்தில் உள்ள ஒரே ஒரு பாறை 80டன் ( 80,000 கிலோ ) எடை கொண்டது , உலகையே வியக்க வைக்கும் இந்த 1000 வருடங்களுக்கு மேலாக கம்பீரமாக நிற்கும் கட்டிடம் , எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் எப்படி கட்டப்பட்டது என்று வியப்பை மட்டுமே பதிலாய் வைத்துள்ள இப்படிப்பட்ட கட்டிடம் உலக அதிசய பட்டியலில் இடம் பெறவில்லை !

சில நேரங்களில் வெளியில் உள்ளதை பற்றி வியப்படையும் நாம், நம் தமிழ்நாட்டிலேயே அதைக்காட்டிலும் சிறப்பாக உள்ளனவற்றை , தமிழனின்

மாவீரன் அலெக்ஸாண்டர


 

மாவீரன் அலெக்ஸாண்டரின் கடைசி ஆசைகள்.......

மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.

ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.

அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.

அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.

1.
என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2.
வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3.
உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக........!!!

காட்விட் பறவை






அதிசிய காட்விட் பறவை பற்றிய தகவல் !!!

பறவையை கண்டே விமானம் உருவாக்கப்பட்டது.ஆன...ால் என்னதான் செயற்கை பொருட்களை வைத்து மனிதன் விமானத்தை உருவாக்கினாளும் பறவைகளை மிஞ்ச முடியாது என்பதை காட்விட் நிருபித்துள்ளது உணவில்லாமல் 11 ஆயிரம் கி.மீ. தூரம் பறக்கும் பறவை ஓய்வே எடுத்துக்கொள்ளாமல் தொடர்ந்து 11 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பறப்பதைக் கற்பனை செய்து பாருங்கள். தலை கிறுகிறுத்துவிடும். ஆனால் அந்தச் 'சாதனையைப்' புரிகிறது, 'காட்விட்' என்ற பறவை, தொடர்ந்து எட்டு நாள் பறக்கும் இப்பறவை ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை தனது உடல் எடையில் 0.41 சதவீதம் அளவு உணவைக் கிரகித்துக் கொண்டு புயல் வேகத்தில் பயணத்தை மேற்கொள்கிறது.

ஒவ்வொரு இலையுதிர்க் காலத்திலும் அலாஸ்காவில் இருந்து நியூசிலாந்துக்கு இந்த எட்டு நாள் பயணத்தை மேற்கொள்கிறது காட்விட்.இந்தப் பறவையானது இடைவிடாது தொடர்ந்து பறக்கிறது. ஓய்வெடுப்பதற்கோ, உணவு உட்கொள்வதற்கோ ஒருமுறை கூட பயணத்தை முறிப்பதில்லை. வசந்த காலம் வந்ததும் மறுபடி நியூசிலாந்தில் இருந்து அலாஸ்காவுக்கு 11 ஆயிரம் கிலோமீட்டர் பயணத்தை மேற்கொள்கிறது.

ஸ்வீடனின்லண்ட் பல்கலைக்கழகம் சுற்றுச்சூழலியல் பேராசிரியர் ஆண்டர்ஸ் ஹெடன்ஸ்ட்ராம், எப்படி இந்தப் பறவை இனத்தால் இவ்வளவு தூரம் இடைவிடாமல் பறக்க முடிகிறது என்று வியந்தார், அதுகுறித்து ஆராய்ந்தார்.

தொடர்ச்சியாக நீண்ட துரத்துக்குப் பறப்பதில், மனிதனால் உருவாக்கப்பட்ட விமானங்களை விட மிகச் சிறந்தது இந்தப் பறவை என்கிறார் ஆண்டர்ஸ்.தொடர்ந்து நீண்ட தூரம் பறந்த விமானத்துக்கான சாதனைக்குரிய கின்டிக் ஸெபர். அது ஓர் ஆளில்லாத சூரியசக்கி விமானம். அது தொடர்ந்து 82 மணி நேரம் காற்றில் பறக்கும். அதவது தொடர்ந்து மூன்றரை நாட்களுக்குப் பறந்து கொண்டே இருக்கும். ஆனால் காட்விக் பறப்பதோ தொடர்ச்சியாக எட்டு நாளைக்கு.

ஆனால் இந்தப் பறவையை இடைநிற்காமல் தொடர்ந்து11 ஆயிரம் கிலோமீட்டர் பறக்க வைப்பது எது? எப்படி 8முழு நாட்களும் இவை உறக்கம் உணவின்றிச் சமாளிக்கின்றன?அதற்கான ஒரு விளக்கம், மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது இவை பறப்பதற்க்குக் குறைவான சக்தியையே பயன்படுத்துகின்றன என்பது. இப்பறவைகள் தாம் பறக்கும் ஒவ்வெரு மணி நேரத்துக்கும் ஒரு முறை தனது உடல் எடையில் 0.41 சதவீத அளவை உணவாகக் கிரகித்துக் கொள்கின்றன என்கிறார் ஆன்டர்ஸ்.

"
மற்ற பறவைகளுடன் ஒப்பிடும்போது இது மிக மிகக் குறைவான அளவு" என்று விளக்குகிறார் ஆண்டர்ஸ். இது தவிர வேறு சில காரணங்களும் இருக்கின்றன. முழுப் பயணத்துக்கும் சக்தியை எடுத்துச் செல்லும் வகையில் பறவையின் உடல் எடையும் அளவும் சரியான விகிதத்தில் இருப்பது முக்கியாமான ஒன்று. 'காட்விட்' பறவைக்குச் சக்தியை அளிப்பது கொழுப்பும், புரதமும்தான். காற்றின் எதிர்ப்பைக் குறைக்கும் 'ஏரோடைனமிக்' உடல் அமைப்பும் உதவுகிறது என்று தெரியவந்திருகிறது.

மற்று ஒருபறவை ஆராய்ச்சியாளராகிய ராபர்ட், "காட்விட்ச்' பறவையின் உடலில், "சேட்டிலைட் டிரான்ஸ் மிட்டர்'களை அமைத்தார். அந்த, "டிரான்ஸ் மிட்டர்' ராபர்ட் டின் கம்ப்யூட்டருக்கு, பறவை பறக்கும் திசையிலிருந்து சிக்னல்களைக் கொடுத்தபடி இருந் தது. அந்த பறவை பறக்கத் துவங்கியது. அப்பறவை, ஒன்பது நாட் களில் 11 ஆயிரம் கி.மீ., பறந்தது. "இந்த பறவைகளின் நீண்ட தூர பயணம் மிகப்பெரிய சாதனை, இதை விவரிக்க வார்த்தைகளே இல்லை' என, ராபர்ட் தெரிவித்துள்ளார்