உலக சுகாதார நிறுவனம், இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதி அன்று, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது.
இந்தியாவில் இந்த விஷயத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.அதாவது, தானாக முன் வந்து ரத்ததானம் வழங்குவதில் நமக்கு இரண்டாம் இடம்..!
ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தவும், உயிர்களை காப்பாற்ற எங்கும் எப்போது ரத்தம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் ஜூன் 14 -ம் தேதி உலக ரத்த தான தினம் (World Blood Donor Day) கொண்டாடப்படுகிறது
ரத்தம் இல்லாமல் எந்த ஓர் உயிரும் இல்லை. நாம் மூச்சு விடும் ஆக்ஸிஜனை உடலுக்குள் சுமந்து இந்த ரத்தம்தான் என்பதால் அதன் முக்கியத்துவம் நாம் அனைவரும் அறிந்ததுதான். மற்றவர்களின் உயிரைக் காக்க உயிர் கொடுக்கப்படுவதால் அது தானங்களில் மிகச் சிறந்ததாக இருக்கிறது.
பொதுவாக நாம் ஒருவர் விபத்தில் சிக்கிக் கொண்டால்,வெளியேறிய ரத்தத்தை ஈடுகட்டவே ரத்தம் தேவைப்படுவதாக நினைக்கிறோம்.ஆனால்,உண்மையில் ஏராளமான தருணங்களில் ரத்தத்தின் தேவை அவசியமானதாக இருக்கிறது.
பிரசவத்தின் பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படும் போது,ரத்த சோகை மற்றும் ரத்தம் மாற்று சிகிச்சை, தீ காயம் அடைந்தவர்களுக்கான சிகிச்சை,ரத்தப் புற்று பாதிப்பு என ரத்தத்தின் அவசர தேவையின் பட்டியல் நீளுகிறது.
No comments:
Post a Comment