Friday, 24 August 2012

பாமரனையும் சிரிக்க வைத்த மணி அண்ணே..









Dedicated to @All in All Azhagu Raja

கோஷம் போட கூட்டமில்லை
கூட்டம் போட்டு உயரவில்லை
பாலும் தேனும் ஊற்றவில்லை
பதவியை பிடிக்க நடிக்கவில்லை

தமிழன், தளபதி என்றெல்லாம்
தானே தம்பட்டம் அடிக்கவில்லை
"தமிழா, விழிப்பாய்!!! " என்றெல்லாம்
தத்துவம் எதையும் பாடவில்லை

மன்றங்கள் ஒருநாள் ஒன்றாகி
மாநாடு மேடை போடவில்லை
அழகியை பிடித்த கையினிலே
ஆட்சியை பிடிப்பேன், கூறவில்லை

அப்பாவின் வால் பிடித்து வந்தவரில்லை
தப்பான வழி ஒன்னும் சொன்னவரில்லை
சிரிப்பு நடிகன்தானே என்று _ அரசும்
சிறப்பு எதையும் செய்யவில்லை

அழகோ ஒன்றும் பெரிதல்ல
அகமோ உனக்கு சிறிதல்ல
சிரிப்பே மருந்தாய் என்றின்
சிரிப்பை கொடுத்த மருத்துவர்

சிறப்பாய் ஒன்றை செய்தாரய்யா
சிரிப்பை ஒன்றே கொடுத்தாரய்யா
நகைச்சுவை என்னும் அமுதூட்டி
மனச்சுமை கொஞ்சம் தீர்த்தாரய்யா

பல்லாண்டு திரையில் இருந்து
பலபேர் கவலை மறந்து
பாமரனையும் சிரிக்க வைத்த
மணி அண்ணே.. உங்கள்
நடிப்பழகும் நகைச்சுவையும்
தனி அண்ணே

சிரிப்பு என்பது மருந்தாகும் _ உங்களை
சிறப்பிப்பது மகத்துவம் ஆகும் _
நாளைய தலைமுறையும் மகிழுமே
நன்றிகள் பல கோடி கவுண்டரே ..

காலமும் பிரியாத நீங்கள் _ இந்த
கவிதையிலும் பிரியக் கூடாது _ ஆகவே
ஒருவருக்கு நன்றி போதும்
இருவருக்கும் பொதுவாய் போகும்..





No comments:

Post a Comment