Saturday, 25 August 2012

வணிக நிலையங்கங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்


வணிக நிலையங்கங்களுக்கான தமிழ்ப் பெயர்கள்

 
பிற மொழிப்பெயர்கள் > தமிழ்ப் பெயர்கள்
1 டிரேடரஸ் : வணிக மையம்
2 கார்ப்பரேஷன் : நிறுவனம்
3 ஏஜென்சி : முகவாண்மை
4 சென்டர் : மையம், நிலையம்
5 எம்போரியம் : விற்பனையகம்
6 ஸ்டோரஸ் : பண்டகசாலை
7 ஷாப் : கடை, அங்காடி
8 அண்கோ : குழுமம்
9 ஷோரூம் : காட்சியகம், எழிலங்காடி
10 ஜெனரல் ஸ்டோரஸ் : பல்பொருள் அங்காடி
11 டிராவல் ஏஜென்சி : சுற்றுலா முகவாண்மையகம்
12 டிராவலஸ் : போக்குவரத்து நிறுவனம் சுற்றுலா நிறுவனம்
13 எலக்டிரிகலஸ் : மின்பொருள் பண்டகசாலை
14 ரிப்பேரிங் சென்டர் : சீர்செய் நிலையம்
15 ஒர்க் ஷாப் : பட்டறை, பணிமனை
16 ஜூவல்லரஸ் : நகை மாளிகை, நகையகம்
17 டிம்பரஸ் : மரக்கடை
18 பிரிண்டரஸ் : அச்சகம்
19 பவர் பிரிண்டரஸ் : மின் அச்சகம்
20 ஆப்செட் பிரிண்டரஸ் : மறுதோன்றி அச்சகம்
21 லித்தோஸ் : வண்ண அச்சகம்
22 கூல் டிரிங்கஸ் : குளிர் சுவைப்பகம், குளிர் சுவை நிலையம்
23 ஸ்வீட் ஸ்டால் : இனிப்பகம்
24 காபி பார் : குளம்பிக் கடை
25 ஹோட்டல் : உணவகம்
26 டெய்லரஸ் ; தையலகம்
27 டெக்ஸ்டைலஸ் : துணியகம்
28 ரெடிமேடஸ் : ஆயத்த ஆடையகம்
29 சினிமா தியேட்டர் : திரையகம்
30 வீடியோ சென்டர் : ஒளிநாடா மையம், விற்பனையகம்
31 போட்டோ ஸ்டூடியோ : புகைப்பட நிலையம், நிழற்பட நிலையம்
32 சிட் பண்ட் : நிதியகம்
33 பேங்க் : வைப்பகம்
34 லாண்டரி : வெளுப்பகம்
35 டிரை கிளீனரஸ் : உலர் வெளுப்பகம்
36 அக்ரோ சென்டர் : வேளாண் நடுவம்
37 அக்ரோ சர்வீஸ் : உழவுப் பணி
38 ஏர்-கண்டிஷனர் : குளிர் பதனி, சீர்வளி
39 ஆர்டஸ் : கலையகம், கலைக்கூடம்
40 ஆஸ்பெஸ்டரஸ் : கல்நார்
41 ஆடியோ சென்டர் : ஒலியகம், ஒலிநாடா மையம்
42 ஆட்டோ : தானி
43 ஆட்டோமொபைலஸ் : தானியங்கிகள், தானியங்கியகம்
44 ஆட்டோ சர்வீஸ் : தானிப் பணியகம்
45 பேக்கரி : அடுமனை
46 பேட்டரி சர்வீஸ் : மின்கலப் பணியகம்
47 பசார் : கடைத்தெரு, அங்காடி
48 பியூட்டி பார்லர் : அழகு நிலையம், எழில் புனையகம்
49 பீடா ஸ்டால் : மடி வெற்றிலைக் கடை
50 பெனிஃபிட் பண்ட் : நலநிதி
51 போர்டிங் லாட்ஜத்ங் : உண்டுறை விடுதி
52 பாய்லர் : கொதிகலன்
53 பில்டரஸ் : கட்டுநர், கட்டிடக் கலைஞர்
54 கேபிள் : கம்பிவடம், வடம்
55 கேபஸ் : வாடகை வண்டி
56 கபே : அருந்தகம், உணவகம்
57 கேன் ஒர்கஸ் : பிரம்புப் பணியகம்
58 கேண்டீன் : சிற்றுண்டிச்சாலை
59 சிமெண்ட் : பைஞ்சுதை
60 கெமிக்கலஸ் : வேதிப்பொருட்கள்
61 சிட்ஃபண்ட் : சீட்டு நிதி
62 கிளப் : மன்றம், கழகம்,உணவகம், விடுதி
63 கிளினிக் : மருத்துவ விடுதி
64 காபி ஹவுஸ் : குளம்பியகம்
65 கலர் லேப் : வண்ணக்கூடம், வண்ண ஆய்வம்,
66 கம்பெனி : குழுமம், நிறுவனம்
67 காம்ப்ளகஸ் : வளாகம்
68 கம்ப்யூட்டர் சென்டர் : கணிப்பொறி நடுவம்
69 காங்கிரீட் ஒர்கஸ் : திண்காரைப்பணி
70 கார்ப்பரேஷன் : கூட்டு நிறுவனம்
71 கூரியர் : துதஞ்சல்
72 கட்பீஸ் சென்டர் ; வெட்டுத் துணியகம்
73 சைக்கிள் : மிதிவண்டி
74 டிப்போ : கிடங்கு, பணிமனை
75 டிரஸ்மேக்கர் : ஆடை ஆக்குநர்
76 டிரை கிளீனரஸ் : உலர் சலவையகம்
77 எலக்ட்ரிகலஸ் : மின்பொருளகம்
78 எலக்ட்ரானிகஸ் : மின்னணுப் பொருளகம்
79 எம்போரியம் : விற்பனையகம்
80 எண்டர்பிரைசஸ் : முனைவகம்
81 சைக்கிள் ஸ்டோரஸ் : மிதிவண்டியகம்
82 பேக்டரி : தொழிலகம்
83 பேன்சி ஸ்டோர் : புதுமைப் பொருளகம்
84 பாஸ்ட் புட் : விரை உணா
85 பேகஸ் : தொலை எழுதி
86 பைனானஸ் : நிதியகம்
87 பர்னிச்சர் மார்ட் : அறைகலன் அங்காடி
88 கார்மென்டஸ் : உடைவகை
89 ஹேர் டிரஸ்ஸர் : முடி திருத்துபவர்
90 ஹார்டு வேரஸ் : வன்சரக்கு, இரும்புக்கடை
91 ஜூவல்லரி : நகை மாளிகை
92 லித்தோ பிரஸ் : வண்ண அச்சகம்
93 லாட்ஜ் : தங்குமனை, தங்கும் விடுதி
94 மார்க்கெட் : சந்தை அங்காடி
95 நர்சிங் ஹோம் : நலம் பேணகம்
96 பேஜர் : விளிப்பான், அகவி
97 பெயிண்டஸ் : வண்ணெய்கள், வண்ணப்பூச்சு
98 பேப்பர் ஸ்டோர் : தாள்வகைப் பொருளகம்
99 பாஸ் போர்ட் : கடவுச்சீட்டு
100 பார்சல் சர்வீஸ் : சிப்பம் செலுத்தகம், சிப்பம் அனுப்பகம்
101 பெட்ரோல் : கன்னெய், எரிநெய்
102 பார்மசி : மருந்தகம்
103 போட்டோ ஸ்டூடியோ : ஒளிபட நிலையம்
104 பிளாஸ்டிக் இன்டஸ்ட்ரி : நெகிலி தொழிலகம்
105 பிளம்பர் : குழாய்ப் பணியாளர்
106 பிளைவுடஸ் : ஒட்டுப்பலகை
107 பாலி கிளினிக் : பலதுறை மருத்துவமனை, பலதுறை மருந்தகம்
108 பவர்லும் : விசைத்தறி
109 பவர் பிரஸ் : மின் அச்சகம்
110 பிரஸ், பிரிண்டரஸ் : அச்சகம், அச்சுக்கலையகம்
111 ரெஸ்டாரெண்ட் : தாவளம், உணவகம்
112 ரப்பர் : தொய்வை
113 சேல்ஸ் சென்டர் : விற்பனை நிலையம்
114 ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் : வணிக வளாகம்
115 ஷோரூம் : காட்சிக்கூடம்
116 சில்க் அவுஸ் : பட்டு மாளிகை
117 சோடா பேக்டரி : வளிரூர்த்தொழில், காலகம்
118 ஸ்டேஷனரி : மளிகை, எழுதுபொருள்
119 சப்ளையரஸ் : வங்குநர்,
120 ஸ்டேஷனரி : தோல் பதனீட்டகம்
121 டிரேட் : வணிகம்
122 டிரேடரஸ் : வணிகர்
123 டிரேடிங் கார்ப்பரேஷன் : வணிகக் கூட்டிணையம்
124 டிராவலஸ் : பயண ஏற்பாட்டாளர்
125 டீ ஸ்டால் : தேனீரகம்
126 வீடியோ : வாரொளியம், காணொளி
127 ஒர்க் ஷாப் : பட்டறை, பயிலரங்கு
128 ஜெராகஸ் : படிபெருக்கி, நகலகம்
129 எக்ஸ்ரே : ஊடுகதிர்



வயிற்றிலிருப்பது ஆணா அல்லது பெண்ணா


வயிற்றிலிருப்பது
ஆணா அல்லது பெண்ணா என்று பண்டைய காலத்தில் தன் தாயினது கருவுற்ற காலத்தை வைத்து கணக்காக கணிக்கப்பட்டது. அக்கணக்கைப் போல் சரியாக குழந்தையும் பிறந்தன் ஆங்கிலம் என்ற ஒரு மொழியை கடவுளாக்கி தமிழை மறந்து தமிழரின் தலை எழுத்தையே மாற்றிவிட்டார்கள்


ஆடிப் பெருக்கு


ஆடிப் பெருக்கு கொண்டாடும் காரணம்:

 
சாயிகளுக்கும் உகந்த மாதம் இந்த ஆடி மாதம். ஆம், உழவு பணிகளை துவங்கும் மாதம். பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீரை நாம் தெய்வமாக மதிக்கிறோம். தண்ணீரை அதிகம் செலவு செய்தால் பணம் விரையம் ஆகும் என்கிறது சாஸ்திரம். கங்கை-காவேரி மற்றும் பல நதிகளை புண்ணிய நதிகளாக, தெய்வீக இடமாக கருதி போற்றி, அங்கு பூஜை செய்வார்கள். எல்லாம மாதங்களிலில் பூஜை செய்வதை விட ஆடிமாதம் பூஜித்தால் விசேஷம் என்று ஏன் கருதுகிறார்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை அறிந்துக்கொள்வோம்.

ஆடிபெருக்கு நாளில் புண்ணிய நதியில் நீராடி தன் தோஷத்தை போக்கி கொண்ட ஸ்ரீராமர்

ஸ்ரீ ராமசந்திரருக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் பல உயிர்களையும் ஸ்ரீஇராமர் கொல்ல நேர்ந்தது. ஸ்ரீராமர் கொன்றது அசுரர்களைதான் என்றாலும் யுத்தத்தில் பலர் கொல்லப்பட்டதால் ஸ்ரீஇராமரை பிரம்ஹத்தி பிடித்துக்கொண்டது. இந்த தோஷத்தில் இருந்து விலக என்ன செய்யவேண்டும என்று வசிஷ்டமுனிவரிடம் கேட்டார் ஸ்ரீராம பிரபு.

இந்த பாவத்தில் இருந்தும் தோஷத்திலிருந்தும் நீ விலக கங்கையில் நீராடு. ஆடிபெருக்கு நாளில் நீராடினால் உடனே உன்னை பிடித்து வாட்டும் பிரம்ஹத்தி தோஷம் விலகும்.” என்றார் வசிஷ்டமுனிவர். முனிவர் கூறியது போல் ஆடிபெருக்கு நாளில் காவேரியில் நீராடி தன் தோஷத்தை போக்கிக்கொண்டார் ஸ்ரீராமர்.

தங்கைக்கு சீர்வரிசை செய்ய காவேரிக்கு வரும் பெருமாள்

ஆடிபெருக்கு நாளில் தன் தங்கையை காண ஆவலோடு இருப்பார் ஸ்ரீமன் நாராயணப் பெருமாள். அத்துடன் தங்கைக்கு சீராக தந்திட புடவை, திருமாங்கல்யம், வெற்றிலை பாக்கு, பழங்கள் போன்றவற்றை சீராக எடுத்துக் கொண்டு யானை மேல் ஏறி வருவதாக புராணம் சொல்கிறது. அதனால் இன்று வரை ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து யானை மீது அம்மன் மண்டபம் படித்துறைக்கு சீர் வரிசையை கொண்டு வருவார்கள். அதை பெருமாள் முன் வைத்து, “உங்கள் தங்கைக்கு தர வேண்டிய சீர் வரிசையை சரி பாருங்கள்.” என்று காட்டுவார்கள். அத்துடன் தீப ஆராதனையும் செய்வார்கள். இதன் பிறகு காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள்.

பூஜை செய்யும் முறை

இந்த ஆடி மாதத்தில் புண்ணிய நதியாய் திகழும் காவிரி கர்ப்பவதியாக இருப்பதாகவும், அதனால் அவளுக்கு பலவகையான உணவுகளை படைத்து மஞ்சல், காதோலை கருகுமணி மாலை, வளையல், தேங்காய், பழம், பூ, அரிசி வெல்லம் மற்றும் சுவையான பழங்களும், மஞ்சல் சரடுகளையும் வைத்து தீபஆராதனை செய்து காவேரியை மகிழ்விப்பார்கள். பிறகு பூஜித்த மஞ்சல் சரடை பெண்கள் தங்கள் கழுத்திலும் ஆண்கள் கைகளிலும் கட்டிக்கொள்வார்கள். காவேரியை பூஜித்து சந்தோஷப்படுத்தினால் அந்த குடும்பத்திற்கு எந்த தீங்கும் வராமல் காவேரி, அன்னையாக இருந்து நம்மை காப்பாள். அத்துடன் நாம் நினைப்பது எல்லாம் நல்லபடியாக நடக்கும். கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் புதுமண தம்பதிகள் புது மஞ்சல் கயிற்றை மாற்றிக்கொள்வார்கள். குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் ஏற்படும். இத்தகைய பல சிறப்புகளை கொண்டது ஆடி மாதமும் ஆடி பெருக்கு திருநாளும் ஆகும்.


இறைவனைத் தேடி






அடர்ந்த கருமை சூழ்ந்த வனாந்திரம்..
விறகுவெட்ட வந்தவனின்
கால்கள் புதைகுழியில் சிக்கின..
கொஞ்சம் கொஞ்சமாக
மண்குழம்பு அவன் உடலை
விழுங்கிக்
கொண்டிருந்தது..

எத்தனையோ கோடி மனிதர்களை
உண்டு செரித்த வயிறல்லவோ
அதற்கு..!

அவனது வாய்
இறைவனின்
நாமங்களை உச்சரித்து அழைத்தது..
அவனது கண்களும் மண்ணுக்குள்
புதைந்தன..

மேலே நீட்டிக் கொண்டிருந்த
அவனது கைகளை
ஒரு உருவம் பற்றியது..

சேற்றிலிருந்து மேலே வந்த அவன்,
கண்களால் அவ்வுருவத்தைப் பார்த்தான்..

வேதத்தையும்,
சடங்குகளையும்
மறுத்துப் பேசியதால்
தன்னுடைய
கிராமத்தினரால்
கல்வீசித் துரத்தப்பட்ட
புத்தரல்லவோ இவர்..!

எனது கையினால் வீசப்பட்ட கற்களால்
காயமடைந்த கரங்களா
என் உயிரைக் காப்பாற்றியது
என்றெண்ணி
வெட்கித் தலைகுனிந்தான்..

உயிரற்ற ஓலைச் சுவடிகளில்
இறைவனைத் தேடினோம்..
உயிர்களின் மேல் காட்டும் கருணையே
கடவுளெனப் போதித்த
கண்ணெதிரே நிற்கும்
ஜீவனுள்ள மனிதனை மறந்து..!

சகோதர சகோதரிகள்
அனைவருக்கும் இந்த
வெள்ளிக்கிழமை
வெற்றிக்கிழமையாகட்டும்.

Friday, 24 August 2012

அடங்க மறு , அத்து மீறு”





அடங்க மறு , அத்து மீறுஇன்று அரசியலில் எல்லோரும் அறிந்த பிரபலமானவாசகம். இதை இந்தியாவிற்கு முதலில் சொன்ன மாவீரன் பகத் சிங் .
இந்திய விடுதலைப் போராட்டம்' என்கிற மாபெரும் கடலில் ஒரு அலைதான் பகத் சிங். சாதாரண அலை அல்ல. ஆழிப் பேரலை. ஆங்கில ஏகாதிபத்தியத்தை புரட்டிப்போட வந்த மாபெரும் அலை. ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கு எதிராக நாடாளுமன்றத்தில்இன்குலாப் ஜிந்தாபாத்' என்று ஓங்கி ஒலித்த பகத் சிங்கின் முழக்கத்தைப் போல ஒரு குரலை அதற்கு முன்பு அந்த நாடாளுமன்றம் கேட்டிருக்கவில்லை.

இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் 1907 ஆண்டு, பஞ்சாபில் உள்ள லாயல் பூர் என்ற கிராமத்தில் சர்தார் கிஷன் சிங்க் மற்றும் வித்தியாவதிக்கும் பிறந்தார். அவர் குடும்பமே விடுதலைப்போராட்ட வீரர்களை கொண்டதால் இளம் வயதிலே நாட்டுப்பற்று மிக்கவராக வளர்ந்தார்
சிறு வயதிலேயே ஜாலியன் வாலாபாக் படுகொலையை கேள்விப்பட்டு அங்கு சென்று இரத்தம் படிந்த மண்ணை ஒரு புட்டியில் அடைத்து எடுத்து வந்து கடைசிவரை தன்னுடன் வைந்திருந்த கொள்கை பற்றாளர்


இளம் வயதிலேயே ஐரோப்பிய புராட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார். 63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதாற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபதிராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதிகாரியைச் சுட்டுக் கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24வது அகவையில் தூக்கிலிடப்பட்டார்.

அவரது நண்பர்கள் சுக்தெவ், ராஜ்குரு, ஆகியோருடன் சேர்ந்து சந்திர சேகர்ஆசாத்தின் உதவியுடன் " Hindustan Socialist Republican Army (HSRA)" என்ற அமைப்பை உருவாக்கி சுதந்திரப்போரில் ஈடுபட்டார். சிறு வயதிலேயெ கோதுமை வயலில் துப்பாக்கி விளைய வைத்து வெள்ளையர்களை வேட்டையாட வேண்டும் எனக்கனவு கண்டவர்.

ஆட்கள் நடமாட்டமில்லாத இடமாகப் பார்த்து அவர் வீசிய வெடி குண்டால் யாருக்கும் சிறு காயம்கூட ஏற்படவில்லை. ஆனால், இங்கிலாந்தில் இருந்துகொண்டு, இந்தியாவை காலனி நாடாக ஆண்டுகொண்டிருந்த ஆங்கிலேய அதிகாரவர்க்கத்தின் செவிகள் புண்ணாகிப் போயின. அதிர்ந்துபோனது வெள்ளை அரசு. பகத் சிங்கின் முழக்கத்துக்குத் தண்டனை கொடுத்தது. தூக்குக் கயிறு.

அவர் புரிந்த சாகசங்கள் எண்ணற்றவை இறுதியாக செண்ட்ரல் அசெம்பிளி ஹாலில் வெடி குண்டு மற்றும் துண்டு பிரசுரம் போட்டு இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழக்கம் இட்டு தானே சரணடைந்து பின்னர் நடைப்பெற்ற லாகூர் கொலைவழக்கு விசாரணையில் தூக்கு தண்டனை அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் விதிக்கப்பட்டது . அப்போது விடுதலைப்போர் என்பதும் ஒரு போர் தான் எனவே எங்களை போர்க்கைதிகளாக நடத்தி தூக்கில் போடாமல் துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள வேண்டும் என மரணத்தையு விரும்பி வரவேற்ற வீரன்!

தூக்கு தண்டனையை நிறுத்த சொல்லி காந்தியிடம் பலரும் முறையிட்டனர், அப்பொழுது இர்வின் பிரபுவிடம் ஒரு ஒப்பந்தம் இட காந்தி இருந்தார், பகத் சிங்க் தூக்கை நிறுத்தினால் தான் ஒப்பந்தம் போடுவேன் என சொன்னால் வெள்ளையர்கள் கேட்பார்கள் என நேரு முதலானோர் எடுத்து சொல்லியும் காந்தி வன்முறை வழியில் செயல் படுபவர்களுக்கு ஆதரவாக செயல் பட மாட்டேன் என வேதாந்தம் பேசி மறுத்து விட்டார். கடைசியில் மார்ச் 23, 1931 இல் பகத் சிங்க் அவர் நண்பர்கள் சுக்தேவ், ராஜ்குரு ஆகியோர் தூக்கில் இடப்பட்டனர். அதற்கு ஒரு நாள் முன்னதாக காந்தியும் ஒப்பந்தம் செய்து கொண்டார். காந்தியின் தீவிர சீடர் ஆன நேருவே மனம் வெறுத்து , இன்னும் ஒரு நாள் கழித்தி கை எழுத்து போட்டிருந்தால் அதற்கு பகத் சிங்கின் ரத்தம் கிடைத்து இருக்கும் என சொன்னார்.

ஒரு போராளியின் வாழ்க்கை என்பது வெறும் சரித்திரம் மட்டுமல்ல. அது ஒரு பாடம். ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். கற்றுக்கொண்டு அதன்வழி நடக்கவேண்டிய ஒரு பாடம்.

ஒரு சேகுவேரா போல இந்தியாவில் இளைஞர்களை வசிகரிக்கும் திறன் கொண்ட மாவீரன் பகத் சிங்.


இன்றைக்கும் இந்தியாவில், எத்தனையோ இளைஞர்களுக்கு, சமூகச் சீர்கேடுகளைக் களையப் போராடும் இளைஞர்களுக்கு பகத் சிங்தான் ரோல் மாடல் அவருக்கு இந்தியா என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.