Friday, 29 June 2012

இரத்த தானம்


உலக சுகாதார நிறுவனம், இரத்த தானம் செய்வோரை சிறப்பிக்கும் விதமாக ஜூன் 14ம் தேதி அன்று, உலக இரத்த வழங்குநர் நாளாக கொண்டாடிவருகிறது.

இந்தியாவில் இந்த விஷயத்தில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருக்கிறது.அதாவது, தானாக முன் வந்து ரத்ததானம் வழங்குவதில் நமக்கு இரண்டாம் இடம்..!

ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை இளைய தலைமுறையினரிடம் ஏற்படுத்தவும், உயிர்களை காப்பாற்ற எங்கும் எப்போது ரத்தம் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் ஜூன் 14 -ம் தேதி உலக ரத்த தான தினம் (World Blood Donor Day) கொண்டாடப்படுகிறது

ரத்தம் இல்லாமல் எந்த ஓர் உயிரும் இல்லை. நாம் மூச்சு விடும் ஆக்ஸிஜனை உடலுக்குள் சுமந்து இந்த ரத்தம்தான் என்பதால் அதன் முக்கியத்துவம் நாம் அனைவரும் அறிந்ததுதான். மற்றவர்களின் உயிரைக் காக்க உயிர் கொடுக்கப்படுவதால் அது தானங்களில் மிகச் சிறந்ததாக இருக்கிறது.

பொதுவாக நாம் ஒருவர் விபத்தில் சிக்கிக் கொண்டால்,வெளியேறிய ரத்தத்தை ஈடுகட்டவே ரத்தம் தேவைப்படுவதாக நினைக்கிறோம்.ஆனால்,உண்மையில் ஏராளமான தருணங்களில் ரத்தத்தின் தேவை அவசியமானதாக இருக்கிறது.

பிரசவத்தின் பெண்களுக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்படும் போது,ரத்த சோகை மற்றும் ரத்தம் மாற்று சிகிச்சை, தீ காயம் அடைந்தவர்களுக்கான சிகிச்சை,ரத்தப் புற்று பாதிப்பு என ரத்தத்தின் அவசர தேவையின் பட்டியல் நீளுகிறது.

Wednesday, 27 June 2012

அஞ்சாதா சிங்கம்


30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்...

அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து

தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழதனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.

பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்தபொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாயகதையுரைத்து

வகுத்துணரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞனெனில்
நானோ கவிஞனில்லை
என்பாட்டும் கவிதையல்ல



இவர்களுக்கும் இந்த பூமியில் வாழ உரிமை உண்டு.

செங்கல்பட்டு போராட்டத்திற்கு சென்றிருந்த போது, பழைய பேருந்து நிலையம் அருகே இவரை பார்த்தேன் . உடம்பெல்லாம் அழுக்கு . குளிப்பதே இல்லை. உடுக்கவோ ஒரு கீழாடை . அதுவும் அழுக்கு . தலைமுடி சிக்கு பிடித்து சடை போட்டு உள்ளது. உறைவிடம் குப்பை தெருக்களில். உறவுகள் யாருமில்லை. இவர் உணவுக்கு என்ன செய்கிறார். யாரிடமும் பிச்சை கேட்பதில்லை. இந்த கடையின் முன் உள்ள குப்பைகளை எடுத்து அருகில் உள்ள தொட்டியில் போடுகிறார் . அதற்கு கூலியாக கடைகாரர் இரண்டு வடைகளை கொடுக்கிறார். என்றாவது கருணை உள்ளங்கள் இவரை பார்த்தால் தேனீர் , உணவு வாங்கிக் கொடுப்பார்கள்.

யார் இவர்கள் , எதற்கு இப்படி சுற்றுகிறார்கள் . இவர்களை போல் இந்த நாட்டில் ஏராளம் பேர்கள் அலைகிறார்கள் . இவர்களை யார் கவனிப்பது? இவர்களில் சிலர் பைத்தியங்கள், சிலர் குடும்பத்தினரால் கைவிடப் பட்டவர்கள், சிலர் உலகை வெறுத்து வெளிய வந்தவர்கள். எந்த உடைமையும் உறவுகளும் இல்லாதவர்கள் , எந்த ஆதரவும் இல்லாதவர்கள். இவர்களை அரவணைக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு . ஆனால் அரசு செய்வதில்லை. அதனால் நம்மை போன்ற மக்களுக்கே அந்த பொறுப்பு உண்டு .

மனித நேய அக்கறை உள்ளவர்கள் தயவு செய்து இது போன்ற மனிதர்கள் உங்கள் கண்களில் தென்பட்டால், அவர்களுக்கு குறைந்த பட்சம் உணவு வாங்கிக் கொடுங்கள். காரணம் இவர்கள் பணத்தை எதிர்பார்பதில்லை. ஒரு படி மேலாக செய்ய முடியும் என்றால் இவர்களுக்கு நல்ல உடை கொடுங்கள். அதற்கு மேலும் செய்ய முயற்சி செய்பவர்கள் இவர்களை குளிக்க வைத்து , பின்பு இவரை போன்றவர்களை பராமரிக்கும் இல்லங்களில் இவர்களை சேர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் பகுதிகளில் இவர்கள் தென்பட்டால், கண்டும் காணாமல் போய் விடாதீர்கள். ஒரு தேநீராவது வாங்கிக் கொடுங்கள். நம்முடைய அன்பு வேண்டுகோள். உயிர்களுக்கு உதவி செய்வதே இறை வழிபாடு என்று உணர்ந்து இதை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள். நமக்கும் சமூக பொறுப்பு இருக்கிறது என்று உணருவோம்..

தமிழ் மொழியின் பிறப்பிடம்

 
 
தமிழனின் பிறப்பிடமும் தமிழ் மொழியின் பிறப்பிடமும் குமரிக்கண்டம் தான். அக்கண்டம் நீரில் மூழ்கிப் போனது. முச்சங்க வரலாற்றாலும் சிலப்பதிகார உரைகள் மூலம் தெரியலாம். திரு. இராமச்சந்திர தீட்சிதர் போன்றோரின் வரலாற்று நூல்கள் வாயிலாகவும், தேவநேயப் பாவாணர் எழுதிய “முதற்தாய் மொழி” வாயிலாகவும் நாம் நன்கறிகிறோம். தமிழன் தோன்றிய இடம் குமரிக்கண்டம் கையாண்ட மொழி தமிழ் மொழியாகும். பல...்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின் படிப்படியாக வளர்ந்த தமிழும் தமிழனும் புகழின் உச்சக்கட்டம் எட்டினர், பழந்தமிழ் நாட்டை உலகிற்குச் சுட்டிக்காட்டினர்.

குமரிக்கண்டமும் அதன் எல்லைகளும் பழந்தமிழ் நாடாகிய குமரிக் கண்டம் அளவில் மிகப் பெரிதாக பரவியிருந்தது. ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக்காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பே குமரிக் கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டம் என்கிறார் ஹிராடடஸ், இக்கருத்தை பேரறிஞர்கள் திரு.ஓல்டுகாம், திரு. எக்கேல், திரு. கிளேற்றர், திரு. கட்டு எலியட், திரு.தேவநேயப் பாவாணர் போன்றோர் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். மேலும் ஹிராடடஸ் அவர்கள் குமரிக்கண்டத்தின் எல்லையைக் குறிப்பிட்டுள்ளார்.

1. தொலைமேற்கில் – கிரேக்க நாடு
2. மேற்கில் – எகிப்து மற்றும் ஆப்பிரிக்கா
3. வடமேற்கில் – மென் ஆப்பிரிக்கா
4. தொலை கிழக்கில் – சீன நாடு
5. கிழக்கில் – பர்மா, மலேசியா, சிங்கப்பூர்
6. தெற்கில் – நீண்ட மலைத் தொடர்

இம்மலைத் தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி தென்னாப்பிரிக்காவில் முடிவடைகிறது என்பதை மனதில் கொள்ள வேண்டும். இவற்றின் மையத்தில் அமைந்த மிகப் பெரிய கண்டமே குமரிக்கண்டம் அல்லது பழந்தமிழ் நாடு அல்லது இலமூரியா கண்டமாகும்.

இக்கண்டத்தை பதினான்கு மாநிலங்களாக அதாவது ஏழு தெங்கு நாடு, ஏழு பனை நாடு என பிரித்திருந்தனர். அந்நாட்டில் வாழ்ந்தவன் தான் தமிழன். அவன் கையாண்ட நாகரிகம்தான் திராவிடநாகரிகம். அவனுடைய வரலாறும் நாகரிகமும் தான் உலகிலேயே முதன்மை வாய்ந்தது. இவனுடைய மொழி தமிழ், தமிழர்கள் தமிழ்நாட்டிலிருந்து கடல் வழியாகவும், தரை மார்க்கமாகவும்உலகெங்கும் சென்று குடியேற்றங்களை அமைத்து தமிழ் மொழியையும், தமிழ்ப் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும் பாரெங்கும் பரப்பானர் என்பதே உண்மை. இதற்குச் சான்றாக பினீசியர்களின் நாணயங்களும் கல்வெட்டுக்களும் உதவுகின்றன. கம்போடியாவில் உள்ள உலகின் மிகப்பெரும் கோவிலையும் இதற்கு சான்றாக எடுத்துக்காட்டலாம்.

இங்குதான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்குதான் நம் மூதாதையர் வாழ்ந்தனர். இங்குதான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தாய்த் தமிழ் பிறந்தது. இங்குதான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளன. ஆம், இதுதான் ” நாவலன் தீவு ” என்று அழைக்கப்பட்ட “குமரிப் பெருங்கண்டம்”.

கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது, ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு மாபெரும் தமிழ்க் கண்டம்! இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, மடகாஸ்கர், தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும் கிழக்கில் உள்ள சில சிறு, சிறு தீவுகளையெல்லாம் இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்”. ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு, ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு, ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு, ஏழுகுரும்பனை நாடு என இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள் இருந்துள்ளன! பறுளி, குமரி என்ற இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!

குமரிக்கொடு, மணிமலை என இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான மூன்று நகரங்கள் இருந்தன. உலகின் தொன்மையான நாகரீகம் என்று அழைக்கப்படும் சுமேரியன் நாகரீகம் வெறும் நான்காயிரம் வருடங்கள் முந்தையது தான்.

நக்கீரர் “இறையனார் அகப்பொருள்” என்ற நூலில் மூன்று தமிழ்ச் சங்கங்கள் 9990 வருடங்கள் தொடர்து நடைபெற்றதாக கூறியுள்ளார். தமிழின் முதல் சங்கம் இந்த கடலடியில் உள்ள “தென்மதுரையில்” கி.மு 4440இல் 4449 புலவர்களுடன் , சிவன், முருகர், அகஸ்தியருடன் 39 மன்னர்களும் இணைந்து நடத்தப்பட்டது. இதில், “பரிபாடல், முதுநாரை, முடுகுருக்கு, கலரியவிரை, பேரதிகாரம்” ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர். இதில் அனைத்துமே கடற்கோளில் அழிந்துவிட்டன. இரண்டாம் தமிழ்ச் சங்கம் “கபாடபுரம்” நகரத்தில் கி.மு 3700இல் 3700 புலவர்களுடன் நடத்தப்பட்டது.

இதில், “அகத்தியம், தொல்காப்பியம், பூதபுராணம், மாபுராணம்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன. இதில் “தொல்காப்பியம்” மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. மூன்றாம் தமிழ்ச் சங்கம் இன்றைய “மதுரையில்” கி.மு 1850 இல் 449 புலவர்களுடன் நடத்தப்பட்டது. இதில், “அகநானூறு, புறநானூறு, நாலடியார், திருக்குறள்” ஆகிய நூல்கள் இயற்றப்பட்டன.

வெளிக்கொண்டுவராத நம் வரலாற்றை, நாமே இந்த உலகிற்குப் பரப்புவோம். இனிமேல் நாம் 2000 வருடம் பழமையானவர்கள் என்ற பழங்கதையை விட்டு விட்டு 20,000 வருடத்திற்கும் பழமைவாய்ந்த உலகின் முதல் இனம் நம் தமிழினம் என்று பெருமையுடன் கூறுவோம்.

வரலாற்றுத் தேடல் தொடரும்..!