Sunday, 11 November 2012

வெடித்துச் சிதறிய இதயங்கள்

பூ  கோர்த்து   விளையாடும்  பிஞ்சுகள் ...
 திரி கோர்த்தால்  சாம்பலாகி  கிடக்கின்றன ...

பாட  சாலையில்  துள்ளி  குதித்த  நெஞ்சங்கள் ...
பட்டாசு ஆலையில்  சிதறி  கிடக்கின்றன  துகள்களாய் ..

பிஞ்சின்  நெஞ்சில் வஞ்சை விதைப்பது
தவறென்று  பிஞ்சை  இன்று  புதைத்து  விட்டோம் ...

அசுரனனை அழிக்க  கண்ணபிரான்
எடுத்த  அவதாரம்  இன்று  பிஞ்சையே
அசுரத்தனமாய் சிதற  வைத்து விட்டது ...


பிஞ்சு  விரல்கள்  ஊசி  வெடியாய்
பின்னி பிணைந்த சரவெடியாய்
மனம் பொங்கும்  மத்தாபில்
சுழன்று  திரிந்த  சங்கு  சாகரமாய்
இவை யாவும் வெடித்து சிதறியாது சிவகாசியில்

37 உள்ளங்கள் உருகுலைந்து 
உடல்கள் தீமுட்டி ,
நாட்டுக்கு துயருட்டி ,

அவர்கள்  சிந்திய ரத்த வெடி ,
இன்பமாகுமா ?  இந்த  தீபாவளி...


எண்ணம் & அனுப்பியது
கவி கிறுக்கன்
தங்கராஜ்



விமர்சனம் அனுப்பவும்


No comments:

Post a Comment