பணக்கார
நண்பர்கள் புடைசூழ..
பகட்டான உணவகத்தில்
முள்கரண்டி உதவிகொண்டு
உண்ட உணவில் எல்லாம் இருந்தது...!
சுள்ளிகொண்டு
அடுப்புமூட்டி..
அனலில் வெந்து
அம்மா சமைத்துப்போட்ட
உணவில் இருந்த
அம்மாவின்
கைப்பக்குவத்தைத் தவிர..
எல்லா
அம்மாக்களுக்கும்
இந்தக் கவிதை
சமர்ப்பணம்..
No comments:
Post a Comment