Sunday, 25 November 2012

பண்டைய தமிழரின் கணித அளவைக் கூறுகள்..


பழம்
நூல்களை ஆய்வு செய்யும்போது எம்
தமிழர்
எவ்வளவு அறிவாளிகளாகவும்,
நுண்ணிய
சிந்தனை உடையவர்களாகவும்
திகழ்ந்திருக்கிறார்கள்
என்று மலைப்பாக
இருக்கிறது.
பெருமையாகவும்
இருக்கிறது.

ஒன்று என்ற எண்ணும்,
அதன் பல கூறுகளும்..
1 - ஒன்று
3/4 - முக்கால்
1/2 - அரை கால்
1/4 - கால்
1/5 - நாலுமா
3/16 - மூன்று வீசம்
3/20 - மூன்றுமா
1/8 - அரைக்கால்
1/10 - இருமா
1/16 - மாகாணி(வீசம்)
1/20 - ஒருமா
3/64 - முக்கால்வீசம்
3/80 - முக்காணி
1/32 - அரைவீசம்
1/40 - அரைமா
1/64 - கால் வீசம்
1/80 - காணி
3/320 -
அரைக்காணி முந்திரி
1/160 - அரைக்காணி
1/320 - முந்திரி
1/102400 - கீழ்முந்திரி
1/2150400 - இம்மி
1/23654400 - மும்மி
1/165580800 - அணு
1/1490227200 - குணம்
1/7451136000 - பந்தம்
1/44706816000 - பாகம்
1/312947712000 - விந்தம்
1/5320111104000 - நாகவிந்தம்
1/74481555456000 - சிந்தை
1/489631109120000 -
கதிர்முனை
1/9585244364800000 -
குரல்வளைப்படி
1/575114661888000000 -
வெள்ளம்
1/57511466188800000000 -
நுண்மணல்
1/2323824530227200000000 -
தேர்த்துகள்.

@ நீட்டலளவு..
10 கோன் - 1 நுண்ணணு
10 நுண்ணணு - 1 அணு
8 அணு - 1 கதிர்த்துகள்
8 கதிர்த்துகள் - 1
துசும்பு
8 துசும்பு - 1 மயிர்நுணி
8 மயிர்நுணி - 1
நுண்மணல்
8 நுண்மணல் - 1
சிறுகடுகு
8 சிறுகடுகு - 1 எள்
8 எள் - 1 நெல்
8 நெல் - 1 விரல்
12 விரல் - 1 சாண்
2 சாண் - 1 முழம்
4 முழம் - 1 பாகம்
6000 பாகம் - 1 காதம்(1200
கெசம்)
4 காதம் - 1 யோசனை

@ பொன்நிறுத்தல்..
4 நெல் எடை - 1
குன்றிமணி
2 குன்றிமணி - 1 மஞ்சாடி
2 மஞ்சாடி - 1 பணவெடை
5 பணவெடை - 1 கழஞ்சு
8 பணவெடை - 1
வராகனெடை
4 கழஞ்சு - 1 கஃசு
4 கஃசு - 1 பலம்

@ பண்டங்கள் நிறுத்தல்..
32 குன்றிமணி - 1
வராகனெடை
10 வராகனெடை - 1 பலம்
40 பலம் - 1 வீசை
6 வீசை - 1 தூலாம்
8 வீசை - 1 மணங்கு
20 மணங்கு - 1 பாரம்

@ முகத்தல் அளவு..
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி

@ பெய்தல் அளவு..
300 நெல் - 1 செவிடு
5 செவிடு - 1 ஆழாக்கு
2 ஆழாக்கு - 1 உழக்கு
2 உழக்கு - 1 உரி
2 உரி - 1 படி
8 படி - 1 மரக்கால்
2 குறுணி - 1 பதக்கு
2 பதக்கு - 1 தூணி
5 மரக்கால் - 1 பறை
80 பறை - 1 கரிசை
48 96 படி - 1 கலம்
120 படி - 1 பொதி

@கால அளவு..
2 கண்ணிமை = 1 நொடி
2 கைநொடி = 1 மாத்திரை
2 மாத்திரை = 1 குரு
2 குரு = 1 உயிர்
2 உயிர் = 1 சணிகம்
12 சணிகம் = 1 விநாடி
60 விநாடி = 1 விநாடி-
நாழிகை
2 1/2 நாழிகை = 1 ஓரை
3-3 1/2 நாழிகை = 1
முகூர்த்தம்
2 முகூர்த்தம் = 1 சாமம்
4 சாமம் = 1 பொழுது
2 பொழுது = 1 நாள்
15 நாள் = 1 பக்கம்
2 பக்கம்-30 நாள் = 1 மாதம்
6 மாதம் = 1 அயனம்
2 அயனம் -12 மாதம் = 1
ஆண்டு
60 ஆண்டு = 1 வட்டம்

Sunday, 11 November 2012

வெடித்துச் சிதறிய இதயங்கள்

பூ  கோர்த்து   விளையாடும்  பிஞ்சுகள் ...
 திரி கோர்த்தால்  சாம்பலாகி  கிடக்கின்றன ...

பாட  சாலையில்  துள்ளி  குதித்த  நெஞ்சங்கள் ...
பட்டாசு ஆலையில்  சிதறி  கிடக்கின்றன  துகள்களாய் ..

பிஞ்சின்  நெஞ்சில் வஞ்சை விதைப்பது
தவறென்று  பிஞ்சை  இன்று  புதைத்து  விட்டோம் ...

அசுரனனை அழிக்க  கண்ணபிரான்
எடுத்த  அவதாரம்  இன்று  பிஞ்சையே
அசுரத்தனமாய் சிதற  வைத்து விட்டது ...


பிஞ்சு  விரல்கள்  ஊசி  வெடியாய்
பின்னி பிணைந்த சரவெடியாய்
மனம் பொங்கும்  மத்தாபில்
சுழன்று  திரிந்த  சங்கு  சாகரமாய்
இவை யாவும் வெடித்து சிதறியாது சிவகாசியில்

37 உள்ளங்கள் உருகுலைந்து 
உடல்கள் தீமுட்டி ,
நாட்டுக்கு துயருட்டி ,

அவர்கள்  சிந்திய ரத்த வெடி ,
இன்பமாகுமா ?  இந்த  தீபாவளி...


எண்ணம் & அனுப்பியது
கவி கிறுக்கன்
தங்கராஜ்



விமர்சனம் அனுப்பவும்


Thursday, 20 September 2012

இது பெண்களுக்கான பதிவு..


 

ஒரு பெண்மனி
தனது அனுபவங்களையும்,
யோசனைகளையும்
நமது தளத்திற்கு வரும் சகோதரிகளுக்கு கூறுவதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது..


அழகிய குடும்ப வாழ்க்கை இனிமையாக
இருக்க சில யோசனைகள்..


அந்த காலம் முதல் இந்த காலம் வரை குடும்பம் என்றால்
பிரச்சினைகள் வருவது இயல்பு தான்...

அந்த பிரச்சினைகள்
சில நேரங்களில் பூகம்பமாக வெடிக்கும்...
இந்த பூகம்பத்தினை
சில நேரங்களில்
எனது அனுபவத்திலே நான் உணர்ந்திருக்கிறேன்...

என்னையும் அறியாமல் 
நாம் எவ்வளவு தான் வீட்டில் நல்லது செய்தாலும் நாம்
கோபப்படுவதால் நமக்கு கெட்ட பெயர்
கிடைத்துவிடும்..

எனது அம்மாவும், மாமியாரும் அடிக்கடி சொல்லும்
வார்த்தை
"
நல்ல பெயர் எடுக்க அதிக நாள் ஆகும்..
கெட்ட பெயர் எடுக்க ஒரு நொடி போதும்" என்பார்கள்..

நான் கோபப்படும் அந்த நேரங்களின் எனது கணவர்,
எனது மாமியாயும் தான் எனக்கு ஆறுதல் வார்த்தைகள்
சொல்லுவாங்க..

கோபத்தினை அடக்கவும் குடும்ப வாழ்க்கை அழகாக
இருக்கவும் என்ன செய்யலாம் என்று தேடிய
பொழுது கிடைத்தப் பயனுள்ள யோசனைகளை உங்களுடன்
பகிர்ந்துக்கொள்கிறேன்...


1.
அழகிய குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்க
முதல் காரணம் பெண்கள் தான்..
குடும்பத் தலைவியாக
வீட்டுக்கு வரும் பெண்ணின் கையில் தான்
வெற்றியிருக்கு..
இதனை உணர்ந்து
நாம் குடும்பத்தினை அழகான முறையில் வழி நடந்த
வேண்டும்..

2.
எப்பொழுதும் முகத்தில் புன்னைகையுடன் இருக்க
மறுக்காதிங்க..

3.
குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரையும்
மதித்து பழகுங்கள்..

மற்றவர்களின் மன
நிலைக்கு தகுந்தது போல் விட்டுகொடுத்து பழகுங்கள்..

நான் ஏன்
விட்டு கொடுக்கனும் என்ற அகம்பாவம் வேண்டாம்..

4.
தாழ்வு மனப்பான்மையினை அடியோடு
அப்புறப்படுத்துங்கள்..

அனைவரிடமும் இயல்பாகப் பேசுகள்..

மனம் திறந்து பாராட்டுங்கள்..

5.
சின்ன விஷயங்களை பெரிதுபடுத்தி அதுக்கு கை,
கால் வைத்து அழகுபடுத்த(!) வேண்டாம்..

எந்த
வகை பிரச்சனை வந்தாலும் சம்பந்தபட்ட நபரிடம்
பேசிப் பாருங்கள்..

6.
வாழ்க்கையின்
பிரச்சனைக்கு தீர்வு என்னவென்று தேடுகள்..
பதிலடி கொடுக்க முயற்சி செய்யாதீர்கள்..

தேவையற்ற
குழப்பங்களை மனதில் ஏற்ற வேணடாம்..

7.
இறைவன் கொடுத்த இந்த அழகான நாளை நான்
பயனுள்ளதாகதான் செலவு செய்வேன் என்ற மனஉறுதியுடன்,
தேவையான நல்ல
சிந்தனைகளை
மட்டுமே சிந்தித்து அதன்
வழியே செலவு செய்யுங்கள்..

8.
நாம் ஆனந்தமாக இருந்தால்
நம்மை சுற்றி இருப்பவர்களும் ஆனந்தமாக
இருப்பார்கள்
என்பதனை மனதில்
கொண்டு
சிரித்த முகத்துடன் பேசிப் பழகுங்கள்..

9.
உங்கள் விருப்பம் போல் உங்கள் குடும்ப நபர்கள் கேட்க
வேண்டும் என்று எண்ணம் வைக்காதிங்க..

நான் பிடித்த
முயலுக்கு மூன்று கால் பிடிவாதம்
பிடிக்காதிங்க..

மற்றவர்களின்
பேச்சுக்கு மதிப்பு கொடுத்து பேச பழகுங்கள்..

10.
குழந்தைகளுடன் ஆனந்தமாக பேசி,
விளையாடி இருங்கள்..

குட்டி குழந்தைகள் செய்யும்
சேட்டைகளை ரசியுங்கள்..
சேட்டை அதிகமானால்
கண்டிக்க மறுக்காதிங்க...

11.
நம் உடல் ஆரோக்கியம் இல்லாத பொழுது தான்
மனதில் ஆனந்தம் நம்மை விட்டு போகும்.. முடிந்த
வரை உடலை ஆரோக்கியமாக வைக்க பாருங்க..

சில நேரங்களில் வரும்
சின்ன சின்ன நோய்களை பெரிதுபடுத்தாமல் வீட்டில் இருக்கும்
பெரியவர்களிடம்,
என்னால்
இன்று உடம்புக்கு முடியவில்லை என்று
சொல்லிவிட்டு ஓய்வு எடுங்கள்..

12.
எல்லா நேரமும் வேலை.. வேலை..
என்று இருக்காமல்
உங்களுக்கு என்று ஒரு சில மணி நேரங்கள்
ஓய்வெடுத்து உங்களுக்கு பிடித்தகாரியங்களில்
ஈடுபடுங்கள்..

உடலுக்கு ஓய்வு கொடுப்பது போல்
உங்கள் மனதுக்கும் ஓய்வு கொடுங்கள்..

13.
குடும்பத்தில் பிரச்சினைகள் வரும்
பொழுதோ அல்லது
மன அழுத்தம் அதிகமாக இருக்கும்
பொழுதோ அவசர முடிவு எதனையும் எடுக்காதிங்க..

14.
முடிந்த வரை குடும்பத்தில் அனைவரும் ஒன்றாய்
சிரித்து பேசி பழகுங்க...

15.
குடும்ப வாழ்க்கை என்பது நாம் செய்யும் சமையல்
போன்றது..
உப்பு, காரம், புளிப்பு, இனிப்பு அளவாக
இருப்பது முக்கியம்..
அதனை பக்குவமாக
செய்வது குடும்ப தலைவியாக இருக்கும்
ஒவ்வொரு பெண்ணில் கையில் தான் இருக்கு..

16.
மற்றவர்களிடம் நாம் காட்டும் வெறுப்பு நம்
மனதினை மேலும் மேலும் குப்பையாக்கிறது..

அமைதியாக இருக்க முயற்சி செய்யுங்கள்..
மனது தூய்மையாகும்...

இனி முடிந்தவரை நம்மை மாற்றி கொள்வோம்..
"
பல முட்களுக்கு நடுவில் தான் அழகான
ரோஜா பூக்கிறது.."

குடும்ப வாழ்க்கையின்
மேடு பள்ளங்களை அழகாக மாற்றுங்கள்..

முழுமையாகப் படித்தமைக்கு நன்றி..!

பிடித்திருந்தால்
மற்றவர்களுக்கும் பகிருங்களேன்....